உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

கண்ணுக்குள் வண்டு புகுந்ததால் விபத்து – பருத்தித்துறை இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

69 பார்வைகள்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை, தும்பளை, நெல்லண்டையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிட்டிவேரம் அம்மன் ஆலயத்துக்கு அருகில் சென்ற வேளையில் திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்…

16 0 0
இலங்கை செய்திகள்

தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல; பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே.!

“உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

7 0 0
இலங்கை செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

13 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு; அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை.!

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை…

9 0 0