உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
47 பார்வைகள்

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த வேளையில் சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், பாரவூர்தியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை – ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37, 36 வயதுடையவர்கள் ஆவார்.

இதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான சொகுசு ஜீப் வாகனத்தை இளைஞர்கள் குழுவொன்று ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுப் பயணித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஜீப் வண்டியும் பாரவூர்தியும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாத்தறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0