உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கல்முனை கடற்கரை பூங்காவை மேம்படுத்தும் நோக்கில் கள ஆய்வு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
91 பார்வைகள்

கல்முனை கடற்கரைப் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் அமைப்பு பேரவையின் உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, கல்முனை மாநகர ஆணையாளர், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள், மாநகர சபை அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டு விரிவான கள ஆய்வை நேற்று (16) மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, பூங்காவின் தற்போதைய நிலை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் குறிப்பாக, பூங்காவின் உள்ளும் வெளியும் காணப்படும் ஒழுங்கற்ற குப்பை கொட்டுதல், குப்பை எரித்தல், கழிவுநீர் தேக்கம், சுகாதாரக் குறைபாடுகள், சேதமடைந்த உட்கட்டமைப்புகள், பராமரிப்பின்மை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

கல்முனை மக்களின் பெருமைக்குரிய இந்த கடற்கரைப் பகுதியை, குடும்பங்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயன்படுத்தக்கூடிய நவீன பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாப் பூங்காவாக மாற்றுவதற்கான பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முழுமையான சுத்தம் மற்றும் கழிவு முகாமைத்துவம், முறையான வடிகால் வசதிகள், பூங்கா அழகுபடுத்தல் மற்றும் மரநடுகை, நடைபாதைகள் மற்றும் அமர்விடங்கள், சிறுவர் விளையாட்டு வசதிகள், போதிய மின்விளக்குகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவை முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.

கல்முனை கடற்கரைப் பூங்கா கல்முனை நகரின் இயற்கைச் செல்வமாகும். இதனைப் பாதுகாத்து, சுத்தமாகவும் அழகாகவும், அனைவரும் பெருமைப்படும் ஒரு முன்னோடியான பொது பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவது எல்லோரதும் பொதுப் பொறுப்புமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0