உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
107 பார்வைகள்

இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். அவர் அந்த கேள்விகளை மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அதனை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அந்த இடத்திலிருந்து அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும் கட்டுப்பட வேண்டும். ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம் அல்லது ஒரு விசாரணைக் குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.

நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே வந்து விட்டனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்கள். அவர் கடந்த காலங்களில் இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது ஆட்களும் எழும்பிச் சென்று விடுவார்கள். அது பிழை.

வடக்கு மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள் உள்ளன. இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு. சிறீதரனோ அர்ச்சுனாவோ வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி நிறுத்தி பழகினால் அது கூட்டத்தை குழப்பலாம் என்ற சிந்தனை வந்துவிடும். அதற்கு இடமளிக்க கூடாது.

ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலாளர் ஊடாகவோ நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து அதனை பேச வேண்டும். ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார் உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும் அதை விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.

அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் இருக்கும்போது அவரை மீறி அர்ச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது கருத்துக்கு அர்ச்சுனா கட்டுப்பட வேண்டும். அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக அர்ச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0