யாழில் கஞ்சா பொதிகள் மீட்பு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்கருகிலிருந்து 14.5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆழியவளைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
