உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
118 பார்வைகள்

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன. அரசாங்கம் அவற்றிற்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் ம.மோகன், திணைக்கள உத்தியோகத்தர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 73 மீனவர்களுக்கு வலைகளும், 02 மீனவர்களுக்கு படகும் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

35 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

34 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

36 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

34 0 0