உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
128 பார்வைகள்

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் பெய்து வரும் கடும் மழையால் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிட்டகொங் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் தகவலின்படி, நாட்டின் 64 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகளில் அதிகபட்சமாக கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, சட்டோகிராம் பகுதியில் 13 பேரும், பந்தர்பன் மாவட்டம் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் அகதிகள் முகாம்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் அபாயம் இருப்பதாக பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0