உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
152 பார்வைகள்

சாவகச்சேரி நகர சபைக்கு புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதுகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வறிதாக்கப்பட்டது.

அந்த வெற்றிடத்தை நிரப்பவே தற்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூட்டத்தைக் கூட்டவுள்ளார்.

இதேநேரம் முன்னாள் உப தவிசாளரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்த மனு நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்மனுதாரர் தரப்பு தமது ஆட்சேபனையை இணைக்கச் சந்தர்ப்பம் வழங்கி வழக்கு 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் சிக்கி உ**யிரிழந்த ஆசிரியர்.!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கமலநாதன் மதிவதனன் என்ற ஆசிரியரே…

43 0 0
இலங்கை செய்திகள்

மத்திய மலைநாட்டில் கனமழை.!

மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கனமழையுடனான காலநிலை நிலவுகிறது. மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய…

57 0 0
இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

62 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

50 0 0