உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
23 பார்வைகள்

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’ போன்றதே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு புதிய அரசமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுகளைக்கூட முன்னெடுக்கவில்லை. தங்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காகவே நீதித்துறையினரின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முற்படுகின்றது.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே அமைய வேண்டும். மாறாக, தற்போது பணியிலுள்ளவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது முறையற்றது. இந்த முயற்சிக்கு எதிராக நீதிமன்ற சமூகம் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது.

நீதித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் நீதித்துறையை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு வருவது அத்தியாவசியமானது.” – என்றார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்பதாகக் கூறும் நீதி அமைச்சர், தனது பதவியை இராஜிநாமா செய்து சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பது சிறந்தது என்றும் பிரேம்நாத் சி. தொலவத்த மேலும் கூறினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0