உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
28 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக் கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கொடூர மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0