உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தவிடு பொடியாகும் – நீதி அமைச்சர் நம்பிக்கை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
51 பார்வைகள்


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத் தவிடுபொடியாக்கத் தயார் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் நீதி அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசைப் பலவீனப்படுத்தவும், அரசியல் ஆதாயம் தேடவும் சில தரப்பினர் இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கின்றனர். எனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் தவிடுபொடியாகும். இவ்வாறான தந்திரங்கள் மூலம் அரசின் செயற்பாடுகளை ஒருபோதும் முடக்க முடியாது.

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. இவ்வாறான விமர்சனங்கள் என்னை மேலும் வலுவான முடிவுகளை எடுப்பதற்கே தூண்டுகின்றன. உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எனக்கு, இதுபோன்ற அரசியல் சவால்கள் ஒரு பொருட்டல்ல.” – என்றார்.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர், சிறைச்சாலைத் துறை மற்றும் நீதி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0