உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
32 பார்வைகள்

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
கடந்த 5 ஆம் திகதி யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையில் ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல், அவ் இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கார் வேகமாக சென்றபோது வீதிக்கடமையில் இருந்த பொலிஸார் இடைமறித்தும் நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.

இதனால் சந்தேகமுற்ற பொலிசார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர்.

சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டதுடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0