உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
60 பார்வைகள்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி தவறுதலாக பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தாயும், உயிரிழந்த குழந்தையும் அயலவர் வீட்டிற்கு சென்ற போது தாய் கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக அயலவர் வீட்டிலேயே சிறுமியை விட்டு வீடு சென்றுள்ளார்.

அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாத நிலையில் அயலவர்கள் தாயாரிடம் சிறுமி வீடு வந்துள்ளாரா என வினவியுள்ளனர்.

அங்கும் குழந்தை இல்லாத நிலையில் தொடர்ந்து தேடிய பொழுது, பாதுகாப்பற்ற கிணற்றில் குறித்த குழந்தை வீழ்ந்து காணப்பட்டதை அவதானித்ததையடுத்து, உடனடியாக சிறுமியை மீட்டு தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதன்போது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0