உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை வேளையில் திடீர் சோதனை நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில்
மேற்கொள்ளப்பட்டது.

அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன் குறிப்பாக நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பேருந்துகளும் பயணிகளும் இதன்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், இச்சோதனை நடவடிக்கை கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்டம் 1-இன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார மேற்பார்வையில் சவளக்கடை பக்கியெல்ல மற்றும் தமண பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தலைமையிலான பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த நடவடிக்கையானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அம்பாறை மாவட்டத்தின் பகுதிகளுக்கு பிற மாகாணங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க இவ்வாறான திடீர் சோதனைகள்பிரதான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0