உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
101 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி பாடங்களுக்கு மதிப்பெண்கள் (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார். இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்சிக்குக் கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இக் கொடூரச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (01) சந்தேகநபரான 55 வயதுடைய விரிவுரையாளரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அம்பாறை மாவட்ட பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே, பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.டி.பி. தரங்கா, பொலிஸ் சார்ஜென்ட் வீரசிங்க (37387), பொலிஸ் கொன்ஸ்டபிள் சந்திகா (12830), பெண் பொலிஸ் சார்ஜென்ட் துஷாரி (3573) மற்றும் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள்களான உஷானி (10237), சச்சினி (10686) ஆகியோர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

தங்கச் சங்கிலிகள் திருட்டு; முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது.!

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை…

66 0 0
அம்பாறை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

101 0 0
அம்பாறை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

98 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

113 0 0