உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
75 பார்வைகள்

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சோக சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(02) அதிகாலை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை – சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி குறித்த மாணவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிட்டங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய கிராமப்புற வீதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால், அப்பாதையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

69 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

70 0 0
அம்பாறை செய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தாய் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…

146 0 0
அம்பாறை செய்திகள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

117 0 0