உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (26 ) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன .

களியோடை பாலத்தின் மேல் பகுதியில் காணப்படும் மண் திட்டியை அகற்றி சேதமடைந்த களியோடை ஆற்றின் இடது கரையை (வடக்கு புற பகுதி) புனர்நிர்மாணம் செய்து நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை நிர்மாணித்தல், கடந்த 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக ரூபாய் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், நிந்தவூர் கமு/கமு/ அல் – மதீனா மகா வித்தியாலயத்திற்கு ஆராதனை மண்டபமும் மற்றும் வகுப்பறைத் தொகுதிகளைக் கொண்ட மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைத்தல். (இந்த பாடசாலையில் மாணவர்களின் தேவைக்கேற்ப கட்டிடங்கள் போதாமல் இருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது)

மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரப் தாஹிர், கே.கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம்.ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

59 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0