உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கோடீஸ்வரர்களுக்கு எரிபொருள் மானியம் அவசியம் இல்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

எரிபொருள் விலையில் சலுகைகளை வழங்கும் போது, அது தகுதியுடையவர்களைச் சென்றடையும் வகையில் இலக்கு வைக்கப்பட வேண்டும் எனவும், கோடீஸ்வரர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் எரிபொருள் மானியம் அவசியமற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கல்வித் துறையில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு எரிபொருள் மானியத்தை வழங்கத் தொடங்கும் போது, நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஏழை எளிய மக்கள் வரை பயன்பெறும் வகையில் அதனை வடிவமைக்க வேண்டும். பெரும் வசதி படைத்தவர்களுக்கு இந்த மானியம் தேவையில்லை.

தற்போதைய அரசு எரிபொருள் விலையை அதிக சதவீதத்தால் அதிகரித்துள்ளது. எனவே, தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி, எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.” – என்றார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் முறையான விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அரசு தனது தேர்தல் கால உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறி வருகின்றது எனவும், எரிபொருள் விலையேற்றம் அனைத்துப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0