உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
51 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையில் யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் தடயவியல் அகழ்வாய்வுகளில் 500 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில எலும்புக்கூடுகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின்படி இலங்கையில் நாடளாவிய ரீதியில் சுமார் 20 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றுள் குறைந்தபட்சம் ஒரு புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.

மேலும், 1998ஆம் ஆண்டு முதன்முறையாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச ஆதரவுடனான சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து செம்மணி விவகாரம் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்திருந்தது. அந்த வாக்குறுதியை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கமைய, செம்மணி தளத்தைப் பாதுகாத்தல், மனித எச்சங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயாதீன விசாரணைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுதல் போன்ற நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” – என்று டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

29 0 0