உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
28 பார்வைகள்

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், எதிரே கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற உந்துருளியும் நேருக்கு நேர் மோதியே இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது முச்சக்கரவண்டியின் பின்னாசனத்தில் பயணித்த கனம்பிட்டியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், உந்துருளியில் பயணித்த ஹீன்பந்தலையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதோடு, உந்துருளியுடனும் மோதியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0