உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
29 பார்வைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரசாரத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது என முதலமைச்சர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக் கணக்குகளை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை வெளிப்படுத்தவில்லை என்றும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

82 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

59 0 0
இந்திய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில…

63 0 0
இந்திய செய்திகள்

கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!

கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக…

75 0 0