உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
92 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலயமானது கதிர்காமத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது தமிழர்களின் வழிவந்த மரபில் நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 19ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்றுவரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சத்தில் தினமும் சுவாமி உள் வீதியுலா, வெளி வீதியுலா நடைபெற்று வருவதுடன் தம்ப பூஜை கொடித்தம்ப பூஜை என்பன நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் அரோகரா ஓசையுடன் அடியார்கள் தேரினை இழுத்து வந்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

தேர் உற்சவத்தினை தொடர்ந்து பச்சை சாத்தும் திருவிழா நடைபெற்றதுடன் சுவாமிக்கு பச்சை நீர் இறைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் தீர்த்த உற்சவம் குருக்கள்மடம் சமுத்திரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0