உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய சுற்றுலாப் பயணிகளின் பெறுமதியான பொருட்கள் திருட்டு; இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பேருந்தில் இருந்த இரு இந்திய சுற்றுலாப் பயணிகளின் பெறுமதிமிக்க பயணப் பொதியைத் திருடிய சந்தேகநபர் ஒருவரைக் குடாஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவிசாவளை, ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் மேற்படி சுற்றுலாப் பயணிகள் இருவரும் பேருந்தில் பயணித்தபோது, தேநீர் அருந்துவதற்காக மொனராகலை – குடாஓயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பயணிகள் தமது பொதியை ஆசனத்தில் வைத்துவிட்டு உணவகத்திற்குச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்திய சந்தேகநபர், அதனைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸாருக்கு, சந்தேகநபர் கண்டி – கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் மற்றுமொரு பேருந்தில் செல்வதாகத் தகவல் கிடைத்தது.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர், குடாஓயா பகுதியில் வைத்து அந்த பேருந்தை வழிமறித்து சோதனை செய்து சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஐபாட் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0