உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல் – ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் சென்ற ஐந்து சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்பிட்டிகம – சந்துன்புர வீதியில் வீதி தடைகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களைப் பொலிஸார் நிறுத்திச் சோதனை செய்தனர்.


அப்போது, தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு புத்தர் சிலை மற்றும் இரத்தினக் கற்களாக சந்தேகிக்கப்படும் மூன்று நீலக்கற்கள், மேலும் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டசந்தேக நபர்களில் மூவர் பெண்கள் ஆவர்.


சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்களாகவும், பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26, 53 மற்றும் 55 வயதுடையவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை, கைது நடவடிக்கையின் போது ஒருவர்தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0