உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வைப் புறக்கணிப்போம் – முஸ்லிம் எம்.பி.க்களுக்கு நிசாம் காரியப்பர் அழைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அழைப்பு விடுத்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், இவ்வழைப்பை முன்வைத்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:ஈரானின் சட்டபூர்வ தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை எந்தவொரு கண்டனத்தையும் வெளியிடாதது கவலைக்குரியது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தகுந்த முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமானதாகும்.

இவ்வாறான இராஜதந்திர சூழ்நிலையில், ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்றதாகும் என அவர் குறிப்பிட்டார்.எனவே, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0