உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நெருக்கடி சமாளிக்க அரசு தீவிரம்: அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் எடுக்கும் கடினமான தீர்மானங்கள் அனைத்தும் விரிவான ஆய்வுகளின் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அவை ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.


தற்போதைய உலகளாவிய சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்து வருவதாகவும், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் வழங்கும் ஆலோசனைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், வெளிநாட்டு உதாரணங்களை மட்டுமே பின்பற்றாமல், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உள்ளூர் அடிப்படையில் தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0