உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மன்னாரில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு, குறிப்பாக விவசாயம் மற்றும் மீனவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்(17) காலை மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மனோகரன் பிரதிப் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் உபாலி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மன்னார் பகுதியில் மீன்பிடி பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதற்காக விசேட பொறிமுறை ஒன்று மீன்பிடி அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்போக அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை விவசாயப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவிலிருந்து அண்மையில் ஒரு எரிபொருள் கப்பல் வந்துள்ளதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளை தவிர்க்க இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுக்க பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர். மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையாமல் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0