உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

2022 இருண்ட காலத்திலிருந்து என்.பி.பி. அரசு பாடம் கற்றதா?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்படப்போகும் விபரீதங்களைச் சுட்டிக்காட்டி, நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் 10 முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இந்தக் கேள்விகளை எழுப்பிய அவர், 2022ஆம் ஆண்டு சந்தித்த இருண்ட காலத்திலிருந்து அரசு பாடம் கற்றுக்கொண்டதா என்று சாடினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய முக்கிய வினாக்கள் வருமாறு:-

உண்மையான கையிருப்பு எவ்வளவு?
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானது? 7 நாட்களுக்கு முன் “இரண்டு மாதங்களுக்கு எண்ணெய் உண்டு” என்று கூறிவிட்டு, இப்போது விலையை உயர்த்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்துங்கள்.

விலையேற்றத் தாக்கம்
உலக சந்தையில் எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்தால், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளை அமைச்சு கணக்கிட்டுள்ளதா?

வரி நீக்கம்
தற்போதைய நெருக்கடியைக் கருத்திற்கொண்டு எரிபொருள் மீதான வட் உள்ளிட்ட வரிகளை உடனடியாக நீக்கி, இறக்குமதி விலையிலேயே மக்களுக்கு வழங்க அரசு தயாரா?

அவசரகாலத் திட்டம்
சர்வதேச கடல் வழித்தடங்கள் முடக்கப்பட்டால், எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி பேண அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத் திட்டம் என்ன?

கியூ.ஆர். ஒதுக்கீடு விஞ்ஞானபூர்வமானதா?
மார்ச் 15 முதல் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள கியூ.ஆர். ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதல்ல என்பதை அமைச்சு ஏற்றுக்கொள்கின்றதா?

அத்தியாவசிய முன்னுரிமை
மின் உற்பத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு எரிபொருளைப் பகிர்ந்தளிக்க வகுக்கப்பட்டுள்ள தேசிய பொறிமுறை யாது?

சர்வதேச பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெறவும், சர்வதேச வலுச்சக்தி நிறுவனத்துடன் பேச்சு நடத்தவும் அரசு ஏன் இன்னும் ஆர்வம் காட்டவில்லை?

கேள்விகளை எழுப்பியதோடு நில்லாது, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார்.

அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணைந்துச் செயற்பட்டு, இந்த மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0