உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

QR முறையால் புதிய வாகனங்களுக்கு எரிபொருள் பெற சிக்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

QR குறியீட்டு முறைமையினால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டால், அதனை மீண்டும் நிரப்புவதற்கு முறையான வசதி இல்லை. இறக்குமதியாளர்கள் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீடுகளைக் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது.

இதனால் மாதத்திற்கு சுமார் 100 முதல் 150 வாகனங்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு, இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் எனப் பிரசாத் மானகே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

45 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

2 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0