புதன் கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு.!
வாராந்தம் வரும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமாகக் பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றிய போது, மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் இந்த விடுமுறைக்கு உட்படாது. பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இதற்குள் உட்பட்டுள்ளன.மேலும், ஏனைய நாட்களில் பணிக்கு அழைக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதில் நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க ஏற்பாடு செய்த அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும், இந்த நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு கூட பொருந்தும் என அவர் தெரிவித்தார்.