உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மின்சார நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சிக்கல் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை. எனவே, முடிந்தவரை எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த நாடு வங்குரோத்தானதால் எமக்கு எரிசக்தி கிடைக்காமல் போன ஒரு நிலை இருந்தது. இப்போது நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாம் சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.

சிக்கனமான ஒரு சமூகமாக நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும்? இந்த நெருக்கடியையும் எதிர்காலத்தையும் எதிர்கொள்ள எமக்குச் சாதகமான சூழல் உள்ளது.முடிந்தால் மின்சார நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள், பயணங்களைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

QR என்பது ஒரு தொழில்நுட்பம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தாங்களாகவே நுகர்வைக் குறைத்துக் கொண்டால் QR அவசியப்படாது. தொழில்நுட்பம் முக்கியமல்ல. QR மூலமும் வழங்கலாம், பங்கீட்டு முறை (Ration) மூலமும் வழங்கலாம் அல்லது கூப்பன் முறை மூலமும் வழங்கலாம். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பொருத்தமானது QR முறைமையாகும்.

இப்போது எம்மிடம் உள்ள எரிபொருள் அளவை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அது மக்களின் கையில்தான் உள்ளது.எந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மக்கள் மாறாமல் எமது நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்க முடியாது. என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0