உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வீதி நாடக வழக்கு: ஹிருணிகா உட்பட 15 பேருக்கு மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமாக வீதி நாடகம் அரங்கேற்றி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக சட்ட ஆலோசனை பெறும் பொருட்டு விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை ஆராய்ந்த நீதிவான், சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணை முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வழக்கை ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.இன்றைய விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0