உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரி தேவைகள் குறித்து எம்.பி. சத்தியலிங்கம் ஆய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (16.03.2026) தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

தாதியர் பயிற்சிக்கல்லூரி சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது, தாதியர் பயிற்சிக்கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன் பயிற்சிக்கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டதுடன், குறைபாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.அடையாளம்காணப்பட்ட மற்றும் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசென்று அவற்றினை தீர்த்துவைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0