உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தரமற்ற நிலக்கரியால் மின் கட்டணத்தை உயர்த்த அரசு சதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த அரசு முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“வரலாற்றில் முதல் முறையாக தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டமையால், லக்விஜய நுரைச்சோலை மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 810 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 678 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது.

  • முதல் அலகு: 216 மெகாவோட்
  • இரண்டாம் அலகு: 230 மெகாவோட்
  • மூன்றாம் அலகு: 232 மெகாவோட்

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி குறையும் போது, அதிக செலவுடைய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை, 75 இலட்சம் மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலை ஒரு சாட்டாகக் கூறி, தவறான தகவல்கள் மூலம் மின் கட்டணத்தை உயர்த்தும் ‘மக்கள் விரோத’ செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.

நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசு நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அரசின் இந்த மோசடி நடவடிக்கையால் மின் கட்டணத்தை உயர்த்துவது, மக்களுடன் செய்துகொண்ட சமூக உடன்படிக்கையை மீறும் செயலாகும்.” – என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

போரைக் காரணமாகக் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த அரசு முற்பட்டால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

55 0 0