உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

சமய நிறுவனங்கள் சமயம் வளர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் சமூக நலனுடனும் செயற்பட முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிக நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெற்றுக்காணிகளில் இருந்து டெங்கின் தாக்கம் அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றினை கட்டுப்படுத்த வெற்றுக்காணி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வெற்றுக்காணிகளை தூய்மைப்படுத்தாதவர்கள் தொடர்பான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

டெங்கு நுளம்பு பெருக்கத்தின் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களின் ஊடாக அறிவுப்புகளை செய்யுமாறும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் எமது சுகாதார பிரிவினரால் கோரப்பட்டது. சில ஆலயங்கள் அவற்றினை சிறப்பாக நடைமுறைப்படுத்தின. ஆனால் பல ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளாமல் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்காமல் செயற்படுகின்றது.

குறிப்பாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையினை நாங்கள் முன்வைத்தபோது அவர்கள் அதனை செயற்படுத்தவில்லை. மாறாக குறித்த ஆலய பகுதியே நுளம்பு பெருகும் இடமாக காணப்பட்டது. குறித்த ஆலயத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆலயங்கள் வெறுமனே சமயம் சார்ந்த செயற்பாடுகளை மட்டும் முன்னெடுக்காமல் சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு சில அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் சுகாதார பணிப்பாளர் இதன்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(16) மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மயில்வாகனம் ருதேசன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் 25வீதமானவை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மயில்வாகனம் ருதேசன் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

55 0 0