உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக பிரேரணை உறுதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கையளிக்கவுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாளை கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

எரிசக்தித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை மற்றும் சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரி இறக்குமதி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

அரசின் வலுசக்தி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0