உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிபொருள் பதுக்கல் செயற்பாடுகளை தடுக்க QR முறை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அதனை தமது தேவைக்காக பயன்படுத்திய தரப்பினர் இன்று அரசாங்கத்தின் மீது பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

வளைகுடா நிலைமையினால் ஆசியாவிலேயே அதிக விலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுவரும் நிலையில் மிக குறைந்த விலையில் இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்கிவரும் நிலையில் எரிபொருள் பதுக்கல் செயற்பாடுகளை தடுப்பதற்கு QR முறை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் பதுக்கல் செயற்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றை தினம் தேசிய நிகழ்வாக நடைபெற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லங்காபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பேவியன் பார்திலட் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுதாகரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உற்பத்தி கிராமத்திற்கான திட்ட முன்மொழிவுகள் அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் குறித்த கிராமத்தின் பயனாளிகளுக்கான பழமரக்கன்றுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

கிராமிய உற்பத்திகள் மூலம் கிராமங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து தேசிய பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்றைய தேசிய நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் பெயர்ப்பலகையும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம பொது அமைப்புகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

33 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

52 0 0