உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கரவண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

அதன்போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆகிய ஐவரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

40 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

47 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0