உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நெல் கொள்வனவு; சத்தியலிங்கம் எம்.பிக்கு நன்றி தெரிவித்த வவுனியா கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. இதுவரை காலமும் நெல் கொள்வனவு தொடர்பில் இருந்த பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்திருந்தார்.

அன்மையில் விவசாய அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் ஒன்றின் போதும் இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தார். நெல் கொள்வனவு இன்மை, தாமதம், விலைப் பிரச்சினை என்பன தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதுடன் விரைவான நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சரின் பணிப்புரைக்கமைய நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வவுனியா மாவட்டத்தில் நெல் கொள்வனவு சீராக இடம்பெற்று வருகின்றது.

இதுதொடர்பில் நேற்று முன்தினம் (10.03.2026) வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளத்தினர் வவுனியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மாவட்ட விவசாயிகள் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் விவசாயத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

அவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவ் விடயங்களை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்த்துவைப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

50 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0