உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைதானவர்கள் தாளங்குடா, மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா ம‌ற்று‌ம் 67,500 மில்லி லீற்றர் கசிப்பு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

40 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

47 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0