உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சட்டவிரோதமாக டீசலை சேகரித்து வைத்திருந்த நால்வர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் 19,060 லீற்றர் டீசலை சேகரித்து வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20, 22, 32 மற்றும் 42 வயதுடைய ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் பியகம பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லீற்றர் டீசல் அடங்கிய 02 பவுசர் வாகனங்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பியகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி வீதியில் பயணிக்கும் லொறிகள், டிப்பர் வாகனங்கள் மற்றும் பிரைமூவர் போன்ற வாகனங்களுக்குப் பணம் வழங்கி, அவ்வாகனங்களின் தாங்கிகளிலிருந்து டீசலைப் பெற்று, தாங்கள் தயாரித்துள்ள தாங்கிகளில் சேமித்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

வாகனங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட 02 குழாய்கள், 16 இரும்புப் பீப்பாய்கள் மற்றும் 381,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (12) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

40 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

47 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0