உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அவர்களுக்கு அந்த இராஜதந்திர பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புதிய நியமனங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் வருமாறு :-

தர்ஷன எம். பெரேரா – மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.எம்.எஸ்.பி. தஸநாயக்க – ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தயானி மெந்திஸ் – ஒஸ்ரியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ருமேனியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வி என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்மிக்க பெர்னாண்டோ – கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுர விதானகே – லெபனானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

எம். பாரூக் எம். பௌசர் – பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0