உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஹட்டன் நகரில் இருந்து போடைஸ் வழியாக டயகம பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் N.C பிரிவு பகுதியில் இன்று 12ஆம் திகதி காலை 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு 75 அடி பள்ளத்தில் தேயிலை மலையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ள நிலையில் சாரதி காயமுற்று நோயாளர் காவு வண்டியில் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் சென்ற ஏனைய இரண்டு பேரும் சிறு சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

இவ் விபத்து சம்பந்தமான விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0