சிறப்பாக நடைபெற்ற விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி.!
அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்ட விநாயகபுரம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர். திரு.பே.ஜெயகாந் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.உதயகுமார், திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு.லலித்தபீரிஸ், வடமத்திய மாகாண இலங்கை வங்கி முகாமையாளர் ஜெயசந்திரன், திருக்கோவில் ஆசிரியர் வள மத்திய நிலைய விரிவுரையாளர் விக்னேஸ்வரன், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பாணிப்பாளர்கள், மதகுருமார், வங்கி முகாமையாளர்கள், அனுசரனையாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், ஆலயங்களின் நிர்வாகத்தினர், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டர்.
இந் நிகழ்வில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வெற்றிக் கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


