உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
50 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரை மூன்று நாள்கள், ஒன்பது அமர்வுகளாக பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக விளக்கக் கூட்டம் நேற்று (2) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

இதில் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் மற்றும் கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீடுகள் கிளையின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 14 பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2,680 உள்வாரி மாணவர்களுக்கும், 417 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், தொழில்சார் ஆங்கிலத்தில் 24 தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 314 மாணவர்களில் நான்கு பேர் கலாநிதிப் பட்டத்தையும், எட்டு பேர் முதுமெய்யியல்மாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 193 மாணவர்கள் பெறவுள்ளதுடன், பண்பாட்டுக் கற்கைகள், சுற்றுச்சூழல் முகாமைத்துவம், சைவசித்தாந்தம், தூய சக்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் வியாபார நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிலும் மாணவர்கள் உயர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

உள்வாரி மாணவர்களில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 149 மாணவர்கள் மருத்துவமாணி மற்றும் சத்திரசிகிச்சைமாணிப் பட்டங்களைப் பெறவுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், கலைப்பீடம், விஞ்ஞான பீடம், காண்பிய மற்றும் ஆற்றுகைக் கலைகள் பீடம், இந்துக் கற்கைகள் பீடம், தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த பிரயோக விஞ்ஞானம் மற்றும் வியாபாரக் கற்கைகள் பீடங்களின் பட்டதாரிகளும் இம்முறை பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அதேவேளை, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக கற்கைகளைப் பூர்த்தி செய்த 91 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 111 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 215 மாணவர்கள் கலைமாணிப் பொதுப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் 100 தங்கப்பதக்கங்கள், 63 பரிசில்கள் மற்றும் 15 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப் பதக்கங்களும் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

அத்துடன், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கமும் இம்முறை வழங்கப்படவுள்ளது.

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, ஒக்டோபர் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலும், சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை மற்றும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை ஆகியனவும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

76 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

82 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

60 0 0