உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
70 பார்வைகள்

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் (C.W.W. Kannangara College) பழைய மாணவராவார்.

கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை, மகா ஓயா, உகண, பதியத்தலாவ, திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

56 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0