உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தம்பியை சிறை மீட்க அயராது பாடுபட்ட தமிழ் அரசியல் கைதியின் சகோதரி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள், புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.

தாய் – தந்தை, குடும்பம் – உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அந்த சகோதரி, 11.3.2026 நேற்றைய தினம் தனது 79வது வயதில், நிறைவேறாக் கனவோடு நீள்துயில் சென்ற துயரமொன்று இடம்பெற்றிருக்கிறது.

சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து சாவடைந்துள்ள அந்தச் சகோதரியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, அந்த ஈர முகத்தை ஒரு தடவை பார்க்கக்கூட முடியாத துர்ப்பாக்கியசாலியாக, சிறைக்குள் இருந்து தேம்பிக்கொண்டிருக்கும் அரசியல் கைதி சிவகுமார் போன்றோரின் இயல்பு வாழ்வுக்கு இனி மேலாவது இலங்கை அரசு மனிதநேயத்துடன் முடிவொன்றை எடுக்குமா? என சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0