கொ*லைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது.!
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் நேற்று புதன்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை – மொரட்டுமுல்ல பகுதியில், 03ஆம் திகதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் அவரது சடலம் முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு மொரட்டுவை பொலிஸ் பிரிவில் வீசப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், குற்ற புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் புறக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.