உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நெல்லியடி பொலிஸாரின் அதிரடியான செயற்பாடு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்களை துரத்திச் செல்லும் காட்சிகள் அண்மையில் வெளியாகியுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொலிஸாரை அவதானித்த கள்ள மண் கடத்தல்காரர் சிறிய ரக வாகனத்துடன் தப்பிச் செல்ல முற்பட்டவேளை அதனை நீண்ட தூரம் இரண்டு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற காட்சி தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.

நெல்லியடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது கள்ளமண் ஏற்றுதல் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வடமராட்சி கிழக்கில் தற்போது இரண்டு டிப்பர்கள் தலா 4 தடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிப்பதுடன் சட்டவிரோத மணல் கடத்தலால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலுக்கு பயந்து கருத்து தெரிவிக்க மக்கள் அச்சப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0