உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இந்தியப் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் சந்தித்தார்.

AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு இதன்போது ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் இந்திய – இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேடமான ஒத்துழைப்பைப் பாராட்டியும், அதற்காக இந்தியப் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.!

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்…

39 0 0
இலங்கை செய்திகள்

கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழப்பு.!

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

60 0 0
இலங்கை செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள்…

62 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசு சதி.!

தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்…

57 0 0